நடிகர் அருண் விஜய் அடுத்ததாக நடிக்கும் படத்தை சுசீந்திரன் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் கடந்த 1995-ஆம் ஆண்டு வெளியான முறை மாப்பிள்ளை படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் அருண் விஜய். இவர் பிரபல நடிகர் விஜயகுமாரின் மகன் ஆவார். இதைத்தொடர்ந்து அருண் விஜய் பல படங்களில் ஹீரோவாக நடித்தாலும், அவரால் முன்னணி நடிகராக உயர முடியவில்லை. இதன் பின் கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான என்னை அறிந்தால் படத்தில் அருண் விஜய் அஜித்துக்கு வில்லனாக நடித்து அசத்தியிருந்தார்.
இதையடுத்து அருண் விஜய் நடிப்பில் வெளியான தடம், குற்றம்-23, மாபியா போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இவர் பாக்சர், சினம், அக்னிசிறகுகள், பார்டர், யானை உள்பட பல திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார். இந்நிலையில் அருண் விஜய்யின் அடுத்த படத்தை சுசீந்திரன் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இயக்குனர் சுசீந்திரன் அழகர் சாமியின் குதிரை, வெண்ணிலா கபடிக்குழு, நான் மகான் அல்ல, ஜீவா, போன்ற பல படங்களை இயக்கியுள்ளார். இதில் அழகர்சாமியின் குதிரை படத்திற்காக இவருக்கு தேசிய விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது.