Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளுக்கு 3 நாள்கள் விடுமுறை…. அரசுக்கு கோரிக்கை….!!!!

தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளுக்கு தீபாவளிக்கு அடுத்து வரும் சனிக்கிழமையும் சேர்த்து 3 நாட்கள் விடுமுறை தரவேண்டுமென்று ரேஷன் கடை ஊழியர்கள் சார்பாக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி நவம்பர் மாதத்திற்கான அத்தியாவசிய பொருட்களை மக்களுக்கு முன்கூட்டியே வழங்க வேண்டும் என்று அரசு ரேஷன் கடை ஊழியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

அதனால் அத்தியாவசிய பொருட்கள் இந்த மாதத்தின் முடிவிலேயே ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. நவம்பர் மாதம் 1 முதல் 3 ஆம் தேதி வரை காலை 8 மணி முதல் இரவு 7 மணி வரை ரேஷன் கடைகளை திறந்து வைக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. அதனால் மக்கள் நவம்பர் மாதத்திற்கான அத்தியாவசிய பொருட்களை முன்னதாகவே பெற்றுக்கொள்ளலாம்.

ரேஷன் கடைகளுக்கு மாதத்தின் 1 மற்றும் 2 ஆம் வெள்ளிக்கிழமைகளில் விடுமுறை ஆகும். இதற்கு பதிலாக அந்த வாரத்தின் ஞாயிற்றுக்கிழமைகளில் ரேஷன் கடைகள் செயல்படும். மேலும் தீபாவளி பண்டிகை நவம்பர் 4ஆம் தேதி வியாழக்கிழமை வருகிறது அன்று அரசு விடுமுறை.

அதன் பின்னர் வரும் வெள்ளிக்கிழமை மாதத்தின் 1 வெள்ளிக்கிழமை என்பதால் நவம்பர் விடுமுறை நாளாக இருக்கிறது. அதனால் தீபாவளி பண்டிகைக்காக நவம்பர் 1-ஆம் தேதி முதல் மூன்று நாட்கள் ஊழியர்கள் அதிக நேரம் வேலை செய்வதால் அதற்கு ஈடுகட்டும் விதமாக நவம்பர் 6ஆம் தேதி சனிக்கிழமை விடுமுறை தரவேண்டும் என்று ரேஷன் கடை ஊழியர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |