Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

எதிர்பாரா விபத்து…. தொழிலாளிக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பாளையங்கோட்டை பகுதியில் சண்முகவேல் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வெல்டிங் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சண்முகவேல் மோட்டார்சைக்கிளில் தியாகராஜ நகரில் உள்ள ஒரு வங்கி அருகில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ஒருவர் எதிர்பாராதவிதமாக சண்முகவேல் மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டார்.

இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட சண்முகவேல் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனைப் பார்த்த அருகிலிருந்தவர்கள் இதுகுறித்து நெல்லை காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல்துறையினர் சண்முகவேலின் உடலை உடனடியாக மீட்டு பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |