டெல்லியில் ஓடும் பேருந்தில் கல்லூரி மாணவி நிர்பயா என்பவர் ஆறு பேரால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இதையடுத்து, அவர் சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இறுதியில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.நிர்பயாவை பாலியல் வன்கொடுமை செய்த ஆறு பேரையும் காவல் துறையினர் கைது செய்தனர். அதில் ஒருவர் 16 வயதிற்குள்பட்ட சிறுவன் என்பது குறிப்பிடத்தக்கது. மீதமுள்ள ஐந்து பேரில் ஒருவர் சிறையிலேயே தற்கொலை செய்துகொண்டார்.
நான்கு பேருக்கு தூக்கு தண்டனை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதில் மூன்று பேர் திகார் சிறையிலும் ஒருவர் மண்டோலியில் உள்ள சிறைச்சாலையிலும் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் அந்த நான்கு பேரும் ஏழு நாள்களுக்குள் குடியரசுத் தலைவருக்கு கருணை மனு அனுப்ப வேண்டும். இல்லையெனில் அவர்களுக்குத் தூக்கு தண்டனை உறுதி செய்யப்படும் என்று திகார் சிறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.இதையடுத்து நான்கு பேரில் ஒருவரான வினய் சர்மா தற்போது குடியரசுத் தலைவருக்கு கருணை மனு அனுப்பியுள்ளார். அவர் அனுப்பிய கருணை மனுவிற்கு குடியரசுத் தலைவர் பதிலளித்தால் வினய் சர்மாவின் தூக்கு தண்டனை நிறுத்திவைக்கப்படும்.