வீடு புகுந்து தாக்கிய 4 பேரை ஊர் மக்கள் சுற்றி வளைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் உள்ள அய்யம்பாளையத்தில் ஜெயக்குமார் என்பவர் தனது மனைவி சினேகாவுடன் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டின் அருகே மாடு மேய்த்துக் கொண்டிருந்தபோது அதே பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த அருண்பாண்டியன் என்பவர் சினேகாவை தவறாக பேசியுள்ளார். இதனை அறிந்த ஜெயக்குமார் மற்றும் சினேகாவின் மாமனாரான ராமலிங்கம் ஆகியோர் அருண்பாண்டியனை எச்சரித்துள்ளனர். இந்நிலையில் சினேகாவின் வீட்டுக்கு சென்ற அருண்பாண்டியன் தனது உறவினரான அய்யனார், தர்மர், ஆனந்த் ஆகியோருடன் அங்கிருந்த ஜெயக்குமார், ராஜேஸ்வரி, ஜெகநாதன் மற்றும் ராமலிங்கம் ஆகியோரை பீர் பாட்டிலால் தாக்கியுள்ளனர்.
இதனைக் கண்ட ஊர் மக்கள் சம்பவ இடத்திற்கு சென்றதால் அங்கிருந்து அருண்பாண்டியன், ஐயனார் மற்றும் தர்மன் ஆகிய மூவரும் தப்பி ஓடி விட்டனர். அவர்களுடன் வந்த ஆனந்த் என்பவர் ஊர் மக்களிடம் வசமாக சிக்கியுள்ளார். அதன்பிறகு ஊர் மக்கள் அவரை தாக்கியுள்ளனர். இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் ஊர் மக்களிடமிருந்து ஆனந்தை காப்பாற்றினர். அதன்பின் சினேகாவின் வீட்டிற்குள் சென்று பீர் பாட்டிலால் அங்கு உள்ளவர்களை தாக்கிய காரணத்திற்காக அருண்பாண்டியன் உட்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.