பாலியல் பலாத்காரம் வழக்கில் கைதான 2 குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
அரியலூர் மாவட்டத்திலுள்ள ஜெயங்கொண்டத்தில் பிரகாஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் 16 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தைகளைக் கூறி அவரை பாலியல் பலாத்காரம் செய்து விட்டு, இதனை வெளியில் கூறினால் கொன்றுவிடுவதாக மிரட்டியுள்ளார். இந்த சம்பவத்தை பெற்றோரிடம் கூறி விடுவதாக மிரட்டி சிவகுமார் என்பவரும் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதனால் கர்ப்பமான அந்த சிறுமிக்கு தற்போது குழந்தை பிறந்துள்ளது. இதுகுறித்து ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் காவல்துறையினர் பிரகாஷ் என்பவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மேலும் மற்றொரு நபரான சிவகுமார் மீதும் குண்டர் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அவரையும் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.