நடிகை சமந்தா மன அழுத்தத்தை போக்க யோகா, தியானம் மற்றும் உடற்பயிற்சிகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் சமந்தா. தற்போது இவர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும் தெலுங்கில் இவர் நடிப்பில் சாகுந்தலா திரைப்படம் உருவாகி வருகிறது. இதைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு மொழிகளில் தயாராகும் இரண்டு படங்களில் நடிக்க சமந்தா ஒப்பந்தமாகியுள்ளார். இதுதவிர இவர் ஒரு ஹிந்தி படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. சமீபத்தில் நாக சைதன்யா, சமந்தா இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.
இந்நிலையில் சமந்தா தற்போது மன அழுத்தத்தில் இருப்பதாகவும், அதிலிருந்து விடுபட யோகா, தியானம் மற்றும் உடற்பயிற்சிகளில் ஈடுபட்டு வருவதாகவும் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் செல்லப் பிராணிகளுடன் விளையாடி வருவதாகவும், மன அழுத்தம் தொடர்ந்தால் நண்பர்களுடன் சுற்றுலா செல்ல திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். நடிகை சமந்தாவின் இந்த பதிவுக்கு ரசிகர்கள் பலரும் ஆறுதலான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.