Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. அடித்து பிடித்து ஓடிய வாலிபர்கள்…. மடக்கிப்பிடித்தபோலீஸ்…!!

கஞ்சா விற்பனை குற்றத்திற்காக ஏற்கெனவே ஒருவர் சிக்கிய நிலையில் 7 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

அரியலூர் மாவட்டத்திலுள்ள கோட்டியால் பேருந்து நிலையத்தின் அருகே கஞ்சா விற்றதாக காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின் பேரில் அப்பகுதியில் சோதனை செய்துள்ளனர். அப்போது சந்தேகத்திற்குரிய சில நபர்கள் காவல்துறையினரை கண்டதும் அங்கிருந்து ஓட்டம் எடுத்தனர். இதனை கண்ட காவல்துறையினர் அவர்களை துரத்தியதில் ஒருவர் மட்டும் சிக்கியுள்ளார். மீதமுள்ள 6 பேர் தப்பி ஓடினர். அதன்பின் சிக்கியவரிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவர் கார்குடி காலனியில் வசித்துவரும் ராஜ்குமார் என்பது தெரியவந்துள்ளது.

மேலும் அதே தெருவை சேர்ந்த பிரபாகரன், வீரக்குமார், சின்னதம்பி, வீரவேல், கபிலன் மற்றும் பாண்டிபஜாரில் வசித்துவரும் செங்குட்டுவன் ஆகியோர் கஞ்சாவை விற்பனைக்காக பிரித்தெடுத்து வைத்திருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் ராஜ்குமாரிடம் இருந்து ஒரு கிலோ 100 கிராம் எடையுள்ள கஞ்சா பொட்டலத்தை கைப்பற்றியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் தப்பியோடிய 6 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

Categories

Tech |