Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

இருத்தரப்பினரிடையே ஏற்பட்ட தகராறு…. 2 பேர் மீது வழக்கு பதிவு…. போலீஸ் விசாரணை….!!

தற்கொலைக்கு தூண்டியதாக 2 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தேவநல்லூர் பகுதியில் மாணிக்கம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விவசாயம் செய்து வந்துள்ளார். இவருக்கு பொன்னாபுரம் கிராமத்தில் விவசாய நிலம் உள்ளது. இந்த நிலம் தொடர்பாக மாணிக்கத்திற்கும் அதே ஊரில் வசிக்கும் வேலுச்சாமி, ரகுபதி ஆகியோருக்கும் இடையே தாராபுரம் கோர்ட்டில் வழக்கு நடந்து வந்தது. இந்த வழக்கில் வெள்ளைச்சாமி, ரகுபதி ஆகியோருக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது. இதனால் அவர்கள் நிலத்தை கையகப்படுத்த பல ஆண்டு காலமாக வெள்ளைச்சாமி முயற்சி செய்து வந்துள்ளார். இதற்கு மாணிக்கம் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார்.

இந்நிலையில் கோர்ட்டு மூலமாக இடத்தை மீட்க முயற்சி செய்து கொண்டிருந்த போது இரு தரப்பினருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த மாணிக்கம் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து மாணிக்கத்தின் மகனான நாட்டுதுரை என்பவர் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் மாணிக்கத்தை தற்கொலைக்கு தூண்டியதாக வெள்ளைச்சாமி, ரகுபதி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |