Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

10 ரூபாய்க்கு மட்டுமே போகுது…. சரியான விலை இல்லை…. விவசாயிகள் வேதனையுடன் செய்த செயல்….!!

சம்பங்கி பூவிற்கு சரியான விலை கிடைக்காததால் விவசாயிகள் அதை குப்பையில் கொட்டியுள்ளனர்.

ஈரோடு மாவட்டத்திலுள்ள கரட்டூர் சாலையில் பூ மார்க்கெட் இயங்கி வருகிறது. இந்த மார்க்கெட்டில் தினசரி காலை 7 மணி முதல் மதியம் 2 மணி வரை பூக்கள் ஏலம் நடைபெறும். இந்நிலையில் மார்க்கெட்டில் சம்பங்கி பூவானது கிலோ 10 ரூபாய்க்கு மட்டுமே விற்பனை ஆனதால் விவசாயிகள் வேதனை அடைந்தனர். இதனால் பெரியகுளத்தை சேர்ந்த விவசாயிகள் 2 பேர் 1 டன் சம்பங்கி பூக்களை மூட்டைகளாக கட்டி அதை அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளத்தில் குப்பையில் கொட்டி விட்டு சென்றுள்ளனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறியபோது “தோட்டத்தில் உள்ள பூக்களை நாங்கள் பறித்து அதை மூட்டைகளாக வைத்திருப்போம். இதனையடுத்து தொழிலாளிகளுக்கு கூலி கொடுத்து பூ மூட்டைகளை வேனில் கொண்டு வந்தால் அதற்கு சரியான விலை கிடைப்பதில்லை. ஆகவே நாங்கள் மன வேதனையோடுதான் இந்த பூக்களை குப்பையில் கொட்டுகிறோம். இதனால் எங்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்படுகிறது” என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |