Categories
மாநில செய்திகள்

பள்ளி மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள்…. தனியாருக்கு அனுமதி…. மீண்டும் அமலுக்கு வரும் திட்டம்….!!!!

தமிழகத்தில் பள்ளி பாடப் புத்தகங்களை தனியார் நிறுவனங்களின் மூலமாக விற்பனை செய்யும் திட்டம் மீண்டும் அமலுக்கு வரவிருக்கிறது. தமிழகத்தில் சமச்சீர் கல்வி பாடத்திட்டம் 2011ஆம் ஆண்டு முதல் பின்பற்றப்பட்டு வருகிறது. இதில் 9 ஆம்வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு முப்பருவ பாடத்திட்டம் உள்ளது. அரசு ,அரசு உதவி பெறும் பள்ளிகள், மெட்ரிக் மற்றும் ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள் போன்ற அனைத்திலும் ஒரே மாதிரியாக சமச்சீர் கல்வி திட்டம் பாடங்கள் நடத்தப்படுகிறது.

இவற்றுக்கான பாடப் புத்தகங்கள் பாடநூல் கழகம் சார்பில் வினியோகம் செய்யப்படுகிறது. மேலும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் பள்ளிக் கல்வித் துறையால் நேரடியாக புத்தகங்கள் இலவசமாக வழங்கப்படுகிறது. தனியார் பள்ளிகளுக்கு பாடநூல் கழகம் வழியாகவும், தனியார் வழியாகவும், விற்பனை செய்யப்பட்ட நிலையில் தனியார் கடைகள் மூலமாக அதிக விலைக்கு புத்தகங்கள் விற்கப்படுவதாக புகார்கள் எழுந்தது.

அதனால் 2017 ஆம் ஆண்டு தனியார் நிறுவனங்கள் பாட புத்தகங்களை விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டது. பாடநூல் கழகம் இதை நேரடியாக விற்பனை செய்யும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது தனியார் மூலமாக பாடப் புத்தகங்களை விற்பனை செய்யும் திட்டம் மீண்டும் அமலுக்கு வரவிருக்கிறது.

இதுபற்றி பாடநூல் கழக மேலாண்மை இயக்குநர் மணிகண்டன் வெளியிட்டுள்ள அறிக்கையில், பள்ளிக்கல்வித்துறை பாடப் புத்தகங்களை விற்பனை செய்ய தனியார் சில்லரை விற்பனையாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். விற்பனை செய்ய விரும்புவோர் தங்களின் விபரங்களுடன் வரும் 5ஆம் தேதிக்குள் பாடநூல் கழகத்துக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |