காவல்துறையினர் நடத்திய அதிரடி வாகன சோதனையில் சாலை விதிகளை மீறிய 704 பேர் மீது வழக்குபதிவு செய்து அபராதம் வசூலித்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் காவல் உட்கோட்ட பகுதியில் துணை சூப்பிரண்டு அதிகாரி ராஜா தலைமையில் காவல்துறையினர் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டிருந்துள்ளனர். அப்போது தலைகவசம் அணியாமல் சென்ற 566 பேர் மீதும், செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஒட்டிய 51 பேர் மீதும், சிவப்பு விளக்கு ஒளிரும் போது நிற்காமல் சென்றதாக 16 பேர் மீதும் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து சரக்கு வாகனத்தில் பயணிகளை ஏற்றி சென்ற 2 பேர் மீதும், சீட்பெல்ட் அணியாமல் காரில் சென்ற 18 பேர் மீதும் இதர பிரிவுகளின் கீழ் 81 மீதும் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி மொத்தம் 708 பேர் மீது வழக்குபதிவு செய்துள்ளனர். மேலும் இவர்களிடம் இருந்து 92,300 ரூபாய் அபராதம் வசூலித்துள்ளனர். இந்நிலையில் கொரோனா குறித்த அச்சமின்றி முககவசம் அணியாமல் சாலைகளில் சென்ற 27 பேரிடமும் காவல்துறையினர் அபராதம் விதித்துள்ளனர்.