Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

திடீரென மாயமான நகைகள்…. அதிர்ச்சியடைந்த கான்ட்ராக்டர்…. போலீஸ் விசாரணை…!!

காணாமல் போன நகை மற்றும் பணம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி மாவட்டத்திலுள்ள பொன்விழாநகரில் கட்டிட ஒப்பந்ததாரராக பணிபுரிந்து வரும் அப்துல்லா ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டிலுள்ள பீரோவில் ரூபாய் 50 ஆயிரம் பணம் மற்றும் 30 பவுன் தங்க நகைகளை வைத்திருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் திடீரென அப்துல்லா ராஜா பீரோவை திறந்து பார்க்கும் போது அந்த பணம் மற்றும் நகைகள் திருட்டுப் போய் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். மேலும் இது குறித்து அப்துல்லா ராஜா பாலக்கரையில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் பாலக்கரை காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |