மத்திய அரசு ஊழியர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் உதவித் தொகையை தொடர்ந்து வழங்கி வருகிறது அதன்படி தற்போது குரூப் சி மற்றும் குரூப் பி ஆகிய நிர்வாக ஊழியர்களுக்கு கடந்த நிதியாண்டிற்கான திறன் சாரா ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று மத்திய நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து நிதி அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் செலவின துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அதில் கடந்த 2020- 2001 நிதியாண்டிற்கான திறன் நிதிசாரா ஊக்கத் தொகையை மத்திய அரசின் குரூப் சி மற்றும் குரூப் பி யில் பணிபுரியும் நிர்வாகம் சாரா ஊழியர்கள் ஆகியோருக்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் மத்திய துணை படையினர் மற்றும் ஆயுதப்படையினர் ஆகியோர்களுக்கும் இந்த ஊக்கத்தொகை வழங்கப்படும் என்றும் ஊக்கத் தொகை கணக்கிட்டு உச்சவரம்பு ரூ.7000 என நிர்ணயிக்கப்பட்டு உள்ளது என்று தெரிவித்துள்ளது.
இதையடுத்து சராசரி ஊதியம் மற்றும் கணக்கிட்டு உச்ச வரம்பு போன்றவற்றில் எது குறைவாக உள்ளதோ அதன் அடிப்படையில் ஊக்கத்தொகை அளிக்கப்படும். அதன்படி கடந்த மார்ச் 31ஆம் தேதி நிலவரப்படி பணியில் இருந்த ஊழியர்களும் மற்றும் தொடர்ந்து 6 மாதங்கள் பணியாற்றிய ஊழியர்கள் ஆகியோர்களுக்கு திறன் சாரா ஊக்கத் தொகை பெற தகுதி உடையவர்கள் என்று தெரிவித்துள்ளது. அதனை போல பணி ஓய்வு பெற்றவர்கள் மற்றும் ராஜினாமா செய்த ஊழியர்கள் ஆகியோர்களுக்கு நிபந்தனையின் அடிப்படையில் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.