சமுத்திரகனி இயக்கி, நடித்த அப்பா படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சமுத்திரகனி இயக்கி, நடித்த அப்பா திரைப்படம் 2016 வெளியாகி வெற்றி பெற்றது. இதில் தம்பி ராமையா, வினோதினி உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்திருந்தனர். மேலும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்திருந்தார். குழந்தைகளிடம் பெற்றோர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதையும், கல்வி முறையில் உள்ள குறைபாடுகளை வெளிப்படுத்தும் வகையிலும் இத்திரைக்கதை அமைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் அப்பா படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்கும் முயற்சியில் சமுத்திரக்கனி ஈடுபட்டு வருவதாகவும், இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாக இருப்பதாகவும் தெரியவந்துள்ளது. மேலும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.