Categories
இந்திய சினிமா சினிமா

ஜாமீன் மனு மீண்டும் தள்ளுபடி…. ஷாருக்கானின் மகன் வழக்கில் நீதிமன்றம் உத்தரவு….!!

ஷாருக்கானின் மகன் ஆர்யகானின் ஜாமீன் மனுவை நீதிமன்றம் மீண்டும் தள்ளுபடி செய்துள்ளது.

மும்பையில் இருந்து கோவா செல்லும் சொகுசு கப்பலில் போதை பொருள் பயன்படுத்தியதாக ஷாருக்கானின் மகன் ஆர்யன்கான் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார். ஆர்யகானின் ஜாமீன் மனு அக்டோபர் 8ஆம் தேதி நிராகரிக்கப்பட்டது. பின்னர், அக்டோபர் 11ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது அவரின் ஜாமீன் மனுவை நீதிமன்றம் நிராகரித்தது.

இந்நிலையில், அக்டோபர் 20ம் தேதியான நேற்று இவரின் வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆர்யகான் உட்பட 3 பேரின் ஜாமீன் மனுவை நீதிமன்றம் நிராகரித்துள்ளது. பலமுறை ஆர்யகானின் மனுவை நீதிமன்றம் நிராகரித்து வரும் நிலையில், அவரை வெளியில் கொண்டு வந்து விடவேண்டும் என முயற்சி செய்யும் ஷாருக்கான் மிகப்பெரிய அதிர்ச்சியில்  இருப்பதாக கூறப்படுகிறது.

Categories

Tech |