கோவை சிறுமி பாலியல் வழக்கில் குற்றவாளிக்கு தூக்குத்தண்டனை வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2010ஆம் ஆண்டு கோவையில் நடைபெற்ற ஒரு சம்பவம் தமிழ்நாட்டு மட்டுமல்ல நாட்டையே உலுக்கியது என்று சொல்ல வேண்டும். ஜவுளி கடை அதிபரின் 11 வயது மகளும் எட்டு வயது மகனும் கடத்தப்பட்டு கொல்லப்பட்டனர். அதில் 11 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். இந்த வழக்கில் கீழமை நீதிமன்றம் , சென்னை உயர் நீதிமன்றம் , உச்ச நீதிமன்றம் என்று அடுத்தடுத்து குற்றவாளிகளுக்கான மரண தண்டனையை கொடுத்திருந்தார்கள்.
இந்நிலையில் மரணதண்டனைக்கு எதிராக சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. தற்போது அந்த சீராய்வு மனுவை தற்போது தள்ளுபடி செய்யப்படி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இதனால் குற்றவாளி மனோகரனுக்கு தூக்கு தண்டனையை உறுதி செய்வதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.கடந்த செப்டம்பர் மாதம் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை உறுதியாகிய நிலையில் சீராய்வு மனு விசாரிக்கப்பட்டதால் நிறுத்திவைக்கப்பட்ட தண்டனை தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது.