சென்னையில் சமீபத்தில் நடந்த பனைச்சந்தை திருவிழாவில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய சீமான்,”தமிழர்கள் எவரும் இந்துக்கள் அன்று. இவர்களின் சமயமானது சிவசமயம் ஆகும். மேலும் எங்களின் சமயமானது சைவம் ஆகும். இவ்வாறு இருக்கையில் கிறிஸ்தவம் என்பது ஐரோப்பிய மதமாகும். அதுபோல் இஸ்லாம் ஆனது அரேபியர்களின் மதமாகும். மரச்செக்குக்கு திரும்பியதை போல, கருப்பட்டிக்கு திரும்பியதைப் போல அனைவரும் தமிழ் சமயத்துக்கு திரும்புங்கள் என்று கூறியுள்ளார்.
சீமானின் இந்த பேச்சானது தற்பொழுது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் உள்ள கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் அனைவரும் மீண்டும் தாய் நாட்டிற்கு திரும்ப வேண்டுமென்று இந்துத்துவ அமைப்புகள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் வேளையில் தற்போது சீமானுடைய இந்த கருத்து சந்தேகத்தை கிளப்பி உள்ளது. சமூக வலைதளங்களில் சீமான் பாஜகவின் பி டீமாக செயல்படுகிறார் என்ற கருத்து பரவிவரும் நிலையில் இவரது இந்தப் பேச்சு இதை உறுதி படுத்துவதுபோல் உள்ளது.
இந்நிலையில் பெரம்பூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய சீமான், “நான் கூறியதை அனைவரும் தவறாக புரிந்து கொண்டீர்கள். நாட்டில் உள்ள கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் நான் மதம் மாற கூறினேன் என்று சொல்கிறார்கள். நான் அவ்வாறு கூறவே இல்லை. நான் சொல்லாததை சொன்னதாக கூறுகிறார்கள். நான் மதத்தை பரப்புவதற்காக வந்தவன் கிடையாது. நான் மொழி, இனம் இதில் மட்டுமே உறுதியாக உள்ளேன். அதுபோல் என் வரலாறு, கோட்பாடு இதில் உறுதியாக இருப்பேன்”என்று கூறினார்.