Categories
உலக செய்திகள்

இது உண்மையா….? இதோட பெயரை மாற்ற போறாங்களா…. பதிலளித்த பேஸ்புக் நிறுவனம்….!!

பேஸ்புக் நிறுவனத்தின் வருடாந்திர கூட்டத்தில் அதன் பெயர் மாற்றம் குறித்து பேச உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது.

உலகமானது வாட்ஸ்அப், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற பல்வேறு சமூக வலைதளங்களால் இயங்கி வருகிறது. அதில் பேஸ்புக்-கும் அடங்கும். இந்நிலையில் பேஸ்புக் நிறுவனத்தின் வருடாந்திர கூட்டம் அக்டோபர் மாதம் 28 தேதி நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் ஃபேஸ்புக்கின் தலைமை நிர்வாகியான Mark Zuckerberg அந்த நிறுவனத்தின் பெயர் மாற்றம் குறித்து பேச போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் விர்ச்சுவல் ரியாலிட்டி போன்ற தொழில்நுட்பங்களை பயன்படுத்தி மெடாவர்ஸ் என்ற பெயரில் புதிய பரிமாணங்களை முகநூல் நிறுவனம் கொண்டு வரும் வகையில் பெயர் மாற்றப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இது குறித்து ஃபேஸ்புக் நிறுவனம் கூறியதாவது “வதந்திகளுக்கும் யூகங்களுக்கும் நாங்கள் கருத்து தெரிவிக்கப் போவதில்லை” என்று கூறியுள்ளது.

Categories

Tech |