நேற்று குறைந்த தங்கம் விலை இன்று அதிரடியாக உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர்.
அதிரடியாக உயர்ந்து வந்த தங்கத்தின் விலை 30 ஆயிரத்தை தாண்டியது . பின்னர் கடந்த சில வாரம் குறைய தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கம் என வாடிக்கையாளர்களுக்கு கண்ணாம்பூச்சி ஆட்டம் காட்டி வந்த தங்கம் இன்று அதிரடியாக குறைந்தது. சென்னையில் ஆபரண தங்கம் கிராமுக்கு 18 ரூபாயும், சவரனுக்கு 144 ரூபாய்யும் உயர்ந்துள்ளது
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 144 உயர்ந்து ரூ 29,408-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே போல 22 காரட் 1 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ 18 உயர்ந்து ரூ 3,676 _க்கு விற்பனை செய்யப்படுகின்றது. அதேபோல வெள்ளியின் விலை 30 காசுகள் குறைந்து ஒரு கிராமுக்கு ரூபாய் 49.40-க்கு விற்பனை செய்யப்படுகின்றது. தங்கம் விலை நேற்று குறைந்து இன்று உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.