Categories
அரசியல்

இவர்களுக்கே உரிமை…! குழப்பத்தை உண்டாக்கும் சசிகலா…. புலம்பும் ஜெயக்குமார்…!!!

அதிமுகவின் பொன்விழா ஆண்டானது சில தினங்களுக்கு முன்பு நடைபெற்றது. இதில் சசிகலா அதிமுக கொடி ஏற்றி வைத்ததோடு மட்டுமல்லாமல் எம் ஜி ஆர் நினைவு இல்லத்தில் பொதுச் செயலாளர் என்று பொறிக்கப்பட்ட  கல்வெட்டை திறந்துவைத்தார். இதனால் விகே சசிகலாவின் மீது அதிமுக வழக்கறிஞர் பிரிவு சார்பில் மாம்பலம் காவல் நிலையத்தில்  புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசியதாவது, “கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளரின் வழிகாட்டுதலின் படியே அதிமுக செயல்பட்டு வருகின்றது.  சசிகலா தொண்டர்களுக்கிடையே குழப்பத்தை உருவாக்கும் வகையில் செயலாற்றி வருகிறார். டெல்லி உயர் நீதிமன்றமும், இந்திய தேர்தல் ஆணையமும் அதிமுக கட்சியின் ஒருங்கிணைப்பாளராக உள்ள  ஓ பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி அவைத்தலைவர் மதுசூதனனுக்கு தான் கட்சியில்  உரிமை உள்ளது என்று அறிவித்து உள்ளது.

இந்நிலையில் கட்சியில் குழப்பத்தை ஏற்படுத்துவதற்காகவே சசிகலா இவ்வாறு செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். அதிமுகவில் பிரச்சினையை ஏற்படுத்த திமுகவும் சசிகலாவும் கைகோர்த்து முயற்சி மேற்கொள்கின்றனர். தமிழகத்தில் உள்ள பொது மக்களுக்கும், காவல்துறையினருக்கும் உரிய மரியாதையும், பாதுகாப்பும் கிடையாது. மேலும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவால் தொடங்கப்பட்ட அம்மா உணவகத்தில் பணிபுரிந்து கொண்டு இருக்கின்ற அதிமுக ஊழியர்களை பணிநீக்கம் செய்துவிட்டு, திமுகவினரை  பணி நியமனம் செய்ய திமுக அரசு நினைக்கிறது. அம்மா உணவகத்தை  திமுக அரசு மூட நினைத்தால் அதற்கு அதிமுகவானது தக்க நடவடிக்கையை மேற்கொள்ளும்” என்று கூறினார்.

Categories

Tech |