நாட்டில் பல்வேறு மாநிலங்களில் கடந்த சில நாட்களாகவே மழை பெய்து வருகிறது. அதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிலும் குறிப்பாக விவசாயிகளுக்கு பல இழப்பு ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு அரசு பல்வேறு நிதி உதவிகளை வழங்கி வருகிறது.
இந்நிலையில் மழையால் பாதித்த விளைநிலங்களுக்கு ஹேக்டேருக்கு இழப்பீடாக ரூ.50,000 வழங்கப்படும் என்று டெல்லி அரசு அறிவித்துள்ளது. நாட்டிலேயே அதிக பட்ச இழப்பீட்டு தொகையை டெல்லி அரசு அறிவித்துள்ளது மிகுந்த கவனத்தை ஈர்த்துள்ளது. இதையடுத்து டெல்லி அரசு விவசாயிகளுக்கு எப்போதும் துணை நிற்கும் என்று முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.