Categories
தேசிய செய்திகள்

ஒண்ணா… ரெண்டா… நிறைய சிக்கல் இருக்கு… தொடக்கப் பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்குமா மாநில அரசு…?

கர்நாடக மாநிலத்தில் தொடக்கப்பள்ளி திறப்பதில் புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளதால், தொடக்க பள்ளி திறப்பு தள்ளி வைக்கப்படுமா? என்று மாநில அரசு ஆலோசனை செய்து வருகிறது.

இந்தியா முழுவதும் தீவிரமாக பரவி வந்த தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டு உள்ளது. அதை தொடர்ந்து தொற்றின் இரண்டாவது அலை பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தி இருந்தது. தற்போது அதன் தாக்கம் படிப்படியாக குறைந்து கொண்டு வருவதால் பல மாநிலங்களில் 9 முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டு படங்கள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் கர்நாடக மாநிலத்திலும் கடந்த ஆகஸ்ட் 23-ஆம் தேதி முதல் 9 முதல் 12-ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது. பின்னர் செப்டம்பர் 6 ஆம் தேதியிலிருந்து ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டன.

இதையடுத்து ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளி திறப்பது குறித்து அம்மாநில அரசு ஆலோசனை செய்து வருகின்றது. தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு முதலில் அரை நாள் மட்டும் வகுப்புகள் நடத்தப்படும் எனவும், பின்னர் நவம்பர் மாதத்திலிருந்து முழுநேரமும் பள்ளிகள் திறப்பது குறித்து ஆலோசனை செய்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் சில பெற்றோர்கள் மூன்றாவது அலை ஏற்படக்கூடும் என்ற அச்சத்தில் ஆன்லைன் மற்றும் ஆப்லைன் என இரண்டு வழிகளிலும் வகுப்புகளை நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர். இதனால் ஆசிரியர்களுக்குப் பெருமை பணிச்சுமை ஏற்படும். அதுமட்டுமில்லாமல் போதிய பேருந்து வசதிகள் இல்லாத பள்ளிகளுக்கு மிகச் சிரமத்தை ஏற்படுத்தும்.

மேலும் பல பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பி வைப்பதில் தயக்கம் காட்டி வருகின்றன. இது தொடர்பாக பேசிய மானசரோவர் புஷ்கரினி வித்யாஷ்ராமா செயலாளர் ஸ்வரூபினி சந்தேஷ் தெரிவித்துள்ளதாவது: நவம்பர் 2-ம் தேதி முதல் தொடக்கப் பள்ளிகள் திறந்து நேரடி வகுப்புகளை நடத்த பள்ளிகள் திட்டமிட்டுள்ளது. இதற்காக பெற்றோர்களின் கருத்துக்களை கேட்டு வருகிறோம். அதன் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும். நேரில் வகுப்புகளுக்கு அதிக அளவிலான மாணவர்கள் வந்தால் இரண்டு பாகங்களாக பிரித்து ஒரு நாள் விட்டு ஒரு நாள் பாடம் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |