Categories
மாநில செய்திகள்

சாவுடா ..!! உன்னை சும்மா விட கூடாது…. தூக்கை உறுதி செய்த உச்சநீதிமன்றம் ….!!

கோவையில் சிறுமியை கடத்தி கொன்ற வழக்கில் குற்றவாளி மனோகரனுக்கு தூக்கு தண்டனையை உறுதி செய்தது உச்ச நீதிமன்றம்.

கடந்த 2010ஆம் ஆண்டு கோவையில் நடைபெற்ற ஒரு சம்பவம்  தமிழ்நாட்டு மட்டுமல்ல நாட்டையே உலுக்கியது என்று சொல்ல வேண்டும். ஜவுளி கடை அதிபரின் 11 வயது மகள் முஸ்கான்னும் , எட்டு வயது மகன் ரித்திக்_கும்  கடத்தப்பட்டு கொல்லப்பட்டனர். அதில் 11 வயது சிறுமி முஸ்கான் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார்.இவர்களின் உடல்  பொள்ளாச்சி அருகே கண்டுபிடிக்கப்பட்டது.இருந்த கொலை வழக்கில் வாடகை கார் ஓட்டுனர் மோகன்ராஜ் , நண்பர் மனோகரன் கைது செய்யப்பட்டனர்.

விசாரணையின்போது தப்பியோடிய குற்றவாளியை போலீசார் சுட்டுக் கொன்றது.இதில் குற்றவாளிகளுக்கு கீழமை நீதிமன்றம் , உயர்நீதிமன்றம் , உச்ச நீதிமன்றம் தூக்கு தண்டனையை உறுதி செய்தது. இந்த உத்தரவை  எதிர்த்த மனோகரன் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனுவை தாக்கல் செய்தார். இந்தவழக்கை விசாரித்த நீதிபதிகள் ரோகின்டன், நாரிமன் தலைமையிலான அமர்வு தீர்ப்பை ஒத்திவைத்திருந்தது. இந்நிலையில் குற்றவாளி மனோகரன் தொடர்ந்த சீராய்வு மனுவை தள்ளுபடி செய்த உச்ச தண்டனையை உறுதி செய்தது.

Categories

Tech |