Categories
கிரிக்கெட் விளையாட்டு

ரிஷப் பண்ட்-க்கு கீப்பிங் பயிற்சி கொடுத்த தோனி ….! வைரல் வீடியோ ….!!!

டி20 உலக கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணிக்கெதிரான பயிற்சி ஆட்டத்தின் போது  ரிஷப் பண்ட்-க்கு மென்டார் தோனி பயிற்சி கொடுக்கும் காட்சி  இணையத்தில் வைரலாகியுள்ளது .

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான எம்.எஸ்.தோனி சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற நிலையில், தற்போது நடைபெற்று வரும் 2021 டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணியின் மென்டாராக  பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் நேற்று நடந்த இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான பயிற்சி ஆட்டத்தின் போது தோனி , இளம் விக்கெட் கீப்பர்  ரிஷப் பண்ட்-க்கு விக்கெட் கீப்பிங் பயிற்சி கொடுத்தார்.

https://twitter.com/pant_fc/status/1450775698218520586

இந்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. குறிப்பாக சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக அமீரக ஆடுகளத்தில் விக்கெட் கீப்பர் பணி கொஞ்சம் கூடுதலாக தேவைப்படுகிறது. இதன் காரணமாக தோனி தன்னுடைய அனுபவத்தில் கற்றுக் கொண்டவற்றை  ரிஷப் பண்டுடன் பகிர்ந்துள்ளார்.

Categories

Tech |