கொரோனா பரவல் அதிகரிப்பை கட்டுபடுத்துவதற்காக ரஷ்ய நாடு முழுவதற்கும் ஏழு நாட்கள் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதிலும் உள்ள மக்கள் கொரோனா வைரஸை கட்டுபடுத்துவதற்காக தடுப்பூசி செல்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் கொரோனா வைரஸின் தாக்கம் சற்று குறைந்து காணப்படுகிறது. ஆனால் ரஷ்யாவில் தற்போது மீண்டும் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அந்நாட்டில் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கையானது 1,25,325 மாக அதிகரித்துள்ளது. இவ்வாறு தொற்றின் எண்ணிக்கை அதிகரித்ததற்கான காரணம் மக்கள் தடுப்பூசி செலுத்த ஆர்வம் காட்டாததே ஆகும் என மருத்துவத் துறையில் உள்ள விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும் ரஷ்ய நாட்டிலுள்ள மக்கள் தொகையில் 35 சதவீதம் பேர் மட்டுமே தற்போது வரை தடுப்பூசி செலுத்தியுள்ளனர்.
இதனால் கொரோனா பரவலின் அதிகரிப்பை கட்டுபடுத்துவதற்காக ரஷ்ய நாட்டின் தலைநகரான மாஸ்கோவில் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் தடுப்பு ஊசி செலுத்தி கொள்ளாத 60 வயதிற்கு மேற்பட்டோர் அனைவரும் தங்களது வீடுகளில் இருந்து பணிபுரிய அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதனையடுத்து சமூகப் பணியாளர்கள் கட்டாயமாக தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் தொற்றின் பரவலை கட்டுப்படுத்த ரஷ்யா நாட்டின் அதிபரான புதின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டுள்ளார் அது யாதெனில் ரஷ்யா முழுவதற்கும் ஏழு நாட்கள் (october 30 முதல் november 7 வரை) ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் ரஷ்ய நாட்டு மக்கள் தங்களது பொறுப்பை உணர்ந்து தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.