தமிழகத்தில் கடந்த ஒன்றரை வருடங்களாக கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது. அதன்பிறகு கொரோனா பரவல் சற்று கணிசமாக குறைந்து நிலையில் கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் 9- 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. அதனைத் தொடர்ந்து வருகின்ற நவம்பர் 1-ஆம் தேதி முதல் 1- 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகளை பள்ளி கல்வித்துறை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் நவம்பர் 4 ஆம் தேதி அன்று தீபாவளி பண்டிகை வருவதால் பள்ளிகள் நவம்பர் 8ஆம் தேதி திறக்கப்படும் என்று பல்வேறு தரப்பினரும் ஆலோசனை நடத்தி வருகின்றனர். அதனைத் தொடர்ந்து புதுச்சேரி அரசு தமிழக அரசு போன்று நவம்பர் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவித்திருந்தது ஆனால் நவம்பர் 1ஆம் தேதி விடுதலை நாள், 2ஆம் தேதி கல்லறை நாள் மற்றும் 4 ஆம் தேதி தீபாவளி பண்டிகை வருவதால் அன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு நவம்பர் 8ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று புதுச்சேரி அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மேலும் தமிழகத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சுழற்சிமுறையில் வகுப்புகள் நடைபெற்று வருவதால் பாடங்கள் முழுமையாக நடத்தி தேர்வுக்கு தயார் படுத்த முடியாத நிலை உருவாகி உள்ளது. இதனால் மாணவர்களுக்கு தினசரி வகுப்புகள் நடத்தி முழு நேர வகுப்பில் தொடரவும் அரசு அனுமதி வழங்க வேண்டும் என்று ஆசிரியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இந்த தமிழக ஆசிரியர்களின் கோரிக்கைக்கு புதுச்சேரி மாநில அரசு நடவடிக்கை மேற்கொள்ள பரிசீலித்து வருகின்றனர். மேலும் பள்ளிகளில் இடவசதிக்கு ஏற்ப நவம்பர் 15 முதல் முழு நேர வகுப்பு தொடக்க அனுமதி வழங்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து முதல்வர் மற்றும் கல்வி அமைச்சர் ஆகியோர் ஆலோசித்து முடிவு செய்த பின்னர் அறிவிப்பு வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.