Categories
தேசிய செய்திகள்

போதைப்பொருள் வழக்கு….. ஜாமீன் கோரி ஆரியன் கான் ஐகோர்ட்டில் மேல்முறையீட்டு மனு….!!!

பொருள் வழக்கில் ஜாமீன் வழங்கக்கோரி ஆரியன் கான் மும்பை கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார்

கடந்த அக்டோபர் மாதம் 3 ஆம் தேதி மும்பையில் இருந்து கோவா சென்ற சொகுசு கப்பலில் போதைப்பொருள் விருந்து நடப்பதாக அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பேரில் அதிரடி சோதனை நடத்திய அதிகாரிகள் இந்தி நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் உட்பட 8 பேரை கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் 12 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் மும்பையில் உள்ள ஆர்தர் ரோடு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

சிறையில் அடைக்கப்பட்ட ஆரியன் கான்க்கு ஜாமீன் கேட்டு கடந்த சில நாட்களுக்கு முன்னர் மும்பை கோர்ட்டில் மனு தாக்கல் செய்து இருந்தார். ஆனால் அவரது மனுவை மும்பை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனை தொடர்ந்து மும்பை சிறப்பு போதைப்பொருள் தடுப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்த, மனுவும் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் மீண்டும் ஜாமீன் கோரி மும்பை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.

Categories

Tech |