5 முதல் 11 வயதுடையவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான கோரிக்கையை பைஸர் நிறுவனம் வைத்து உள்ளது.
கனடாவில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வரும் நிலையில் அங்கு வசித்து வரும் குறைவான வயதுள்ள குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் கனடா சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் 5 முதல் 11 வயதுடையவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான கோரிக்கையை பைஸர் நிறுவனம் வைத்துள்ளது.
அந்நாட்டின் இளம் வயதினருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு கோரப்பட்ட முதல் வேண்டுகோளாக இது தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பைஸர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி இளம் பருவத்தினர் 2,268 நபர்களுக்கு சோதனையாக செலுத்தப்பட்டது. இதில் யாருக்கும் எந்த பக்கவிளைவும் ஏற்படவில்லை. மேலும் குழந்தைகளுக்கு செலுத்தப்படும் இந்த தடுப்பூசிகளை வழக்கமாக போடப்படும் தடுப்பூசிகளுடன் ஒப்பிடுகையில் குறைந்த டோஸ்களை கொண்டுள்ளதாக பைஸர் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.