இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் நேற்று இஸ்ரேல் பிரதமர் நஃப்தலி பென்னெட்டை நேரில் சந்தித்து பேசியுள்ளார்.
அரசுமுறை பயணமாக இஸ்ரேல் சென்றுள்ள இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் பிரதமர் நஃப்தலி பென்னெட்டை நேற்று நேரில் சந்தித்து பேசியுள்ளார். அப்போது இந்தியா-இஸ்ரேல் இரு நாடுகளுக்கும் இடைப்பட்ட வர்த்தக தொடர்பு மற்றும் உறவு குறித்து இருவரும் கலந்து ஆலோசித்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து இஸ்ரேல் பிரதமர் நஃப்தலி பென்னெட், இந்தியாவை நாங்கள் உயிர் நட்பாக பார்க்கிறோம். நாங்கள் அனைத்து துறையிலும் இரு நாடுகளின் உறவை மேம்படுத்தவே காத்துக் கொண்டிருக்கிறோம். மேலும் நாம் பயனுள்ள சந்திப்பை எதிர்நோக்கி காத்திருப்பதாகவும் பென்னட் இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருடான சந்திப்பின்போது கூறியுள்ளார்.