கோவையில் மதுபானம் கலந்து ஐஸ் கிரீம் விற்ற கடைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது என்று மருத்துவத் துறை தெரிவித்துள்ளது. கோவை பி.என் பாளையம் பகுதியில் மதுபானம் கலந்து ஐஸ் கிரீம் விற்ற கடை மீது புகார் அளிக்கப்பட்டதால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உணவு தயாரிக்கும் இடத்தில் 2 மது பாட்டில்கள் இருந்ததால் கடையின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
Categories