கட்டுமான தொழில் சங்கத்தினர் திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு கட்டுமான தொழில் சங்கத்தினர் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்த போராட்டமானது மாவட்ட தலைவரான மாரியப்பன் என்பவரின் முன்னிலையில் நடைபெற்றுள்ளது.
மேலும் கட்டுமான தொழிலாளர்களுக்கு ஓய்வூதியமாக 3 ஆயிரம் ரூபாய் பணத்தை உயர்த்தி வழங்க வேண்டும் எனவும், பண்டிகைக் கால சலுகை வழங்க வேண்டும் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து கட்டுமான தொழிற்சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்த போராட்டத்தில் கட்டுமான சங்க மாவட்ட பொருளாளர், மாவட்ட துணைச் செயலாளர், பெண்கள் மாவட்ட அமைப்பாளர், மாவட்ட பொதுச்செயலாளர், மாவட்ட துணைத் தலைவர் என பலரும் கலந்து கொண்டனர்.