Categories
கோயம்புத்தூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

மதுபானம் கலந்து ஐஸ்கிரீம் விற்பனை… “உத்தரவு போட்ட அமைச்சர்”…. சீல் வைத்த அதிகாரிகள்!!

கோவையில் மதுபானம் கலந்து ஐஸ் கிரீம் விற்பதாக புகார் எழுந்த நிலையில் கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

கோவை மாவட்டம் பி.என் பாளையம் அவிநாசி சாலையில் இயங்கி வருகிறது ரோலிங் டஃப் க ஃபே (Rolling Dough cafe) ஐஸ்கிரீம் கடை.. இந்த கடையில் ஐஸ்கிரீமில் மதுபானத்தை கலந்து விற்பனை செய்கிறார்கள் என்று நேற்று மதியம் சுமார் 12.30 மணியளவில் மருத்துவத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியனுக்கு சிலர் தகவல் தெரிவித்து இருக்கிறார்கள்.. இந்த தகவலை அடுத்து அவர் அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்ததன் அடிப்படையில், கோவை மாவட்ட நியமன அலுவலர் தலைமையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்..

அந்த கடைக்கு சென்று ஆய்வு மேற்கொள்ளும் பொழுது அங்கு உணவு தயாரிக்கும் இடத்தில் இரண்டு மது பாட்டில்கள் கண்டறியப்பட்டுள்ளது. அங்கிருந்த பெரும்பாலான உணவு பொருட்கள் காலாவதி ஆனவை என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.. அவை அனைத்தும் அழிக்கப்பட்டன.. மேலும் உணவை தயாரித்தவர்கள் உரிய மருத்துவ தகுதிச் சான்றிதழ் இல்லாமல் அதைச் செய்திருக்கிறார்கள்..

ஈக்கள், கொசுக்கள் என்று சுகாதாரமற்ற முறையில் அந்த இடம் இருந்திருக்கிறது.. அங்கு பயன்படுத்தப்பட்ட தண்ணீர் என்பது முறையான ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டதற்கான சான்றிதழ் பெறப்படவில்லை.. அங்கு பணி செய்தவர்கள் கொரோனா காலத்திலும் முகக்கவசம், கையுறை எதுவுமே போடாமல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.. முக்கியமாக அந்த கடையில் ஐஸ்கிரீமில்  மதுபானம் கலந்து விற்கிறார்கள் என்ற புகார் வந்ததன் அடிப்படையில், சோதனை மேற்கொண்ட போது 2 மது பாட்டில்கள் கண்டறியப்பட்டுள்ளதால் அந்த கடைக்கு சீல் வைத்து உரிமம் ரத்து செய்யப்பட்டது.

இதற்கு முன்னதாக இந்த கடை மீது இது மாதிரியான புகார்கள் வந்ததாக தெரியவில்லை. இந்த கடை சுமார் 4 ஆண்டுகளாக செயல்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது..

Categories

Tech |