Categories
மாநில செய்திகள்

முதல்வர் ஸ்டாலின் நடத்தும் ரெய்டு…. இன்னும் ஓரிரு நாட்களில்…. பம்பரமாய் சுழலும் அதிகாரிகள்….!!!!

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஒவ்வொரு துறை சார்பிலும் பல்வேறு அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. அவையெல்லாம் அறிவிப்புகளோடு நின்றுவிட்டதா, நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறதா, என்று முதல்வர் முக. ஸ்டாலின் ஆய்வு செய்து வருகிறார். அதன்படி பொதுப்பணி நீர்வளத் துறை சார்பில் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அறிவித்த அனைத்து அறிவிப்புகளும் எந்த நிலையில் இருக்கிறது என்பதைப்பற்றி முதல்வர் முக. ஸ்டாலின் தலைமையில் ஆய்வு கூட்டம் அக்டோபர் 26ஆம் தேதி நடைபெற இருக்கிறது.

பட்ஜெட் கூட்டத்தொடரில் பொதுப்பணித் துறை மூலமாக கலைஞர் நினைவிடம், கலைஞர் நூலகம், தென் சென்னையில் பறக்கும் மருத்துவமனை போன்ற பல்வேறு துறைகளின் கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது நீர்வளத் துறையில் 500 தடுப்பணைகள், 6 கதவணைகள், 9 நீர்நிலைகள் அமைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிகளையெல்லாம் இந்த ஆண்டிற்குள் செயல்படுத்த வேண்டும் என்று முதல்வர் முக. ஸ்டாலின் அதிகாரிகளுக்கு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளார்.

இதையடுத்து பொதுப்பணித்துறை நீர்வள துறை, உயரதிகாரிகள் சார்பில் விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யும் பணி வேகமாக நடந்து வருகிறது. மேலும் கலைஞர் நூலகம், பல்நோக்கு மருத்துவமனை கட்டுமான பணிகளுக்கு நீர்வளத் துறையின் மூலமாக தடுப்பணைகள், கதவணை பணிகளுக்கு நிதி கேட்டு அரசு ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில் பொதுப்பணி, நீர்வளத்துறை அதிகாரிகள் அமைச்சர்களோடு முதல்வர் முக. ஸ்டாலின் ஆய்வுகூட்டம் நடத்துவது குறிப்பிடதக்கது.

Categories

Tech |