மனைவி மீது பெற்றோல் ஊற்றித் தீ வைத்தவர் தன் மீதும் தீ வைத்து தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பெருவளையம் தாந்தோனியம்மன் கோவில் தெருவில் சங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவர் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் குடிபோதையில் வீட்டிற்கு வந்த சங்கர் மனைவி அலமேலுவின் நடத்தையில் சந்தேகப்பட்டு பேசியதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது கோபமடைந்த சங்கர் தனது இரு சக்கரத்திற்காக வாங்கி வைத்திருந்த பெட்ரோலை மனைவியின் மீதும் தன் மீதும் ஊற்றிவிட்டு தீ வைத்துள்ளார்.
இதில் வலி தாங்க முடியாமல் அலறி கொண்டு வெளியே வந்தவரை அக்கம்பக்கத்தினர் பார்த்து தண்ணீர் ஊற்றி தீயை அணைத்துள்ளனர். பின்னர் அவரின் மனைவியையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு 2 பேரையும் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிரமான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக அலமேலுவின் மகள் ரூபாஸ்ரீ அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.