Categories
அரசியல் மாநில செய்திகள்

இதை இணைத்தால் விடை…. ரெக்க கட்டி பறக்குது அண்ணாமலை டுவீட்…!!!

மின்வாரிய அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில், அண்ணா சாலையில் உள்ள மின்சார வாரிய தலைமையகத்தில் துறை அதிகாரிகளுடன் கூட்டம் நடத்தப்பட்டது.இதைத் தொடர்ந்து அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்து, “மின்துறையில் முறைகேடுகள் நடந்ததற்கான ஆதாரம் தன்னிடம் இருப்பதாகக் கூறும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, எங்கு வேண்டுமானாலும் வரத் தயாராக இருக்கின்றேன்.

கூடுதலாக 24 மணி நேரத்திற்குள் அண்ணாமலைக்கு ஆதாரங்களை வெளியிட நேரம் கொடுக்கப்பட்டுள்ளது, தவறினால் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும். அவர் தனது இருப்பைக் காட்ட இதுபோன்ற செய்திகளை வெளியிடுகிறார். மேலும் ஏதேனும் ஆதாரம் இருந்தால், அவர் தொடரும் வழக்கை எதிர்கொள்ளத் தயாராக உள்ளேன்” என்று கூறினார். அமைச்சர் செந்தில் பாலாஜியின் அறிவிப்பைத் தொடர்ந்து அண்ணாமலை ட்விட்டரில் இதற்கு பதிலளித்தார்.

அதில், கோபாலபுரம் – பிஜிஆர் எனர்ஜி – மின்சார அமைச்சகம் – v.செந்தில்பாலாஜி இந்த புள்ளிகளை இணைத்து பாருங்க. விடை எளிதில் புரியும் என்று டுவீட் செய்துள்ளார். இந்த டுவீட்டை நெட்டிசன்கள் அதிகமாக பகிர்ந்து வருகின்றனர்.

Categories

Tech |