நீதிமன்ற வளாகத்திலேயே செல்போன் திருடிய அதிர்ச்சி சம்பவம் சென்னையில் நடந்துள்ளது.
சென்னை ஆலந்தூர் நீதிமன்ற வளாகத்தில் ஆஜராக சுந்தரவடிவேல் என்பவர் நேற்று வந்திருந்தார். அதேபோல் வேறொரு வழக்கில் ஆஜராவதற்காக ஆதம்பாக்கத்தை சேர்ந்த அரவிந்த் ரமேஷ் ஆகிய இருவரும் வந்து இருந்தனர். அப்போது அரவிந்த் குமாரபுரம் சேர்ந்த சுந்தரவடிவேலு என்பவரது செல்போனை அவரது பாக்கெட்டில் இருந்து லாபகமாக திருடி உள்ளார்.
இதை அறிந்த சுந்தரவடிவேல் அரவிந்தை கையும் களவுமாக பிடித்துள்ளார். பின் அவருடன் வந்த மற்றொரு நபரான ரமேஷ் அங்கிருந்து தப்பி ஓட முயன்ற பொழுது அங்கிருந்த காவல்துறையினர் அவரை விரட்டி பிடித்தனர். பின் இருவரையும் கைது செய்த பரங்கிமலை காவல்துறையினர் ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.