ஆசை வார்த்தைகள் கூறி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை காவல்துறையினர் போக்சோவில் கைது செய்துள்ளனர்.
தேனி மாவட்டம் உத்தமபாளையம் அடுத்துள்ள க.புதுப்பட்டியில் சரத்குமார் என்ற இளைஞர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியை சேர்ந்த 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவியுடன் பழகி வந்துள்ளார். இந்நிலையில் சரத்குமார் மாணவியிடம் திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதுகுறித்து மாணவி தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனடியாக உத்தமபாளையம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை நடத்தி சரத்குமாரை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து கைது செய்துள்ளனர்.