தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் போட்டித் தேர்வில் பங்கேற்க விண்ணப்பித்தவர்களுக்கு முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டு உள்ளது. இதனை தேர்வர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் அரசு பணியிடங்களுக்கான தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றது. அவை துறை ரீதியாக பிரிக்கப்பட்டு குரூப் தேர்வுகள் நடத்தப்படுகின்றன.
கடந்த ஓராண்டுக்கும் மேலாக கொரோனா அச்சுறுத்தல் காரணமாக எந்தவித அரசு போட்டித் தேர்வுகளும் நடத்தப் படவில்லை. ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டது. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து அரசு பணிகள் தேர்வாணையம் போட்டித் தேர்வுகளை நடத்த திட்டமிட்டுள்ளது. அரசுத் துறை வாரியாக அமைச்சர்களும் காலிப்பணியிடங்களை அறிவித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
- தேர்வாணையத்தின் தேர்வுகள் அனைத்தும் விண்ணப்பதாரியின் தர வரிசைப்படி மேற் கொள்ளப் படுகிறார்கள்.
- பொய்யான வாக்குறுதிகளை சொல்லி தவறான வழியில் வேலை வாங்கி தருவதாக கூறும் இடைத்தரகர்களிடம் விண்ணப்பதாரர் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று எச்சரிக்கப்படுகிறது.
- இதுபோன்ற தவறான மற்றும் நேர்மையற்றவர்களால் விண்ணப்பித்து ஏற்படும் எவ்வித இழப்புக்கும் தேர்வாணையம் எந்த விதத்திலும் பொறுப்பாகாது.
- இணையவழி விண்ணப்பத்தில் குறிப்பிடும் அனைத்து தகவல்களுக்கும் விண்ணப்பதாரரே முழு பொறுப்பு.
- விண்ணப்பதாரர் தேர்வு இணைய வழியில் விண்ணப்பிக்கும் போது ஏதேனும் தவறு ஏற்பட்டால் தாங்கள் விண்ணப்பித்த இணைய சேவை மையங்கள் அல்லது பொது சேவை மையங்களை குற்றம் சாட்டப் கூடாது.
- விண்ணப்பதாரர் பூர்த்தி செய்யப்பட்ட இணையவழி விண்ணப்பத்தில் இறுதியாக சமர்ப்பிக்கும் முன்னர் நன்கு சரிபார்த்த பின்னரே சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது .