தற்போது நடக்க இருக்கும் தலைவர் தேர்தலில் சுயேச்சைகள் ஆதரவு அளித்தால் மட்டுமே வெற்றி பெற வாய்ப்புகள் இருக்கிறது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 22 வார்டு கவுன்சிலர் பதவிகளுக்கான உள்ளாட்சி தேர்தலின் வாக்கு பதிவுகள் முடிவடைந்திருக்கிறது. இவற்றில் அ.தி.மு.க எட்டு இடங்களிலும், சுயேட்சைகள் மூன்று இடங்களிலும் மற்றும் தி.மு.க 10 இடங்களிலும், பா.ஜ.க சார்பில் ஒருவரும் வெற்றி பெற்றிருக்கின்றனர். இதில் இவர்களுக்கான பதவி ஏற்பு விழா கந்திலி இருக்கும் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றிருக்கிறது. இவ்விழாவில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சித்ரகலா மற்றும் அப்துல் கலீல் ஆகியோர் வெற்றி பெற்ற ஒன்றிய கவுன்சிலர்களுக்கு வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுகளை தெரிவித்து பேசியுள்ளனர்.
இந்நிகழ்ச்சிக்கு தேர்தல் அலுவலர் ரூபேஷ்குமார் முன்னிலை வகித்து உறுதிமொழி வாசித்து உறுப்பினர்கள் பதவியேற்று கொண்டுள்ளனர். இதனை அடுத்து 7-வது வார்டில் வெற்றி பெற்ற பாரதிய ஜனதா கட்சி சார்பில் லட்சுமி பூபதி மட்டும் பதவி ஏற்காமல் இருந்துள்ளார். இவர் உடல்நிலை சரியில்லை என்று கடிதம் அளித்திருக்கிறார். பின்னர் பதவி ஏற்பு நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் 16 பேர் தேர்தலில் போட்டியிட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது ஒன்றியக்குழு தலைவர் தேர்தல் வெள்ளிக்கிழமை நடைபெற இருக்கிறது. இதில் 12 கவுன்சிலர் ஓட்டுக்களை பெறுகின்றவரை தலைவராக முடியும்.
பிறகு நடைபெற இருக்கும் தேர்தலில் தற்போது நடந்த பதவியேற்பில் கலந்து கொள்ளாதவர்கள் வாக்களிக்க முடியுமா என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. இதற்கான முடிவுகள் மூன்று சுயேச்சைகளின் கையில் தான் இருக்கிறது. அவர்கள் 3 பேரும் தி.மு.க-வுக்கு வாக்களித்தால் ஏற்கனவே உள்ள 10 பேர் ஆதரவு சேர்த்து 13 ஓட்டுகள் கிடைத்தா தி.மு.க இந்த ஒன்றியத்தில் வெற்றி பெற வாய்ப்புகள் இருக்கிறது. இதை தொடர்ந்து மூன்று சுயேச்சைகளையும் பதவி ஏற்க தி.மு.க-வினரை அழைத்து வந்து விட்டு நிகழ்ச்சி முடிந்தவுடன் அழைத்து சென்றுள்ளனர். மேலும் சுயேச்சைகளுடன் அ.தி.மு.க-வினர் பேச முயன்ற போது தி.மு.க-வினர் சூழ்ந்து கொண்டு 3 பேரையும் வேனில் ஏற்றி சென்றுள்ளனர்.