புதுச்சேரியில் கொலை வழக்கில் தொடர்புடைய ரவுடி ஒருவர் வெடிகுண்டு வீசியும் தலை துண்டிக்கப்பட்டும் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
புதுசேரி சுப்பையா நகரை சேர்ந்த பாண்டியன் என்கின்ற ரவுடி 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற கொலை வழக்கு ஒன்றில் தொடர்புடையவர். நேற்று மாலை பக்கத்து தெருவில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று அவரை குறுகலான சந்தில் வழி மறித்த மர்ம கும்பல் வெடிகுண்டு வீசியும் அரிவாளால் தலையை துண்டித்தும் கொலை செய்து விட்டு தப்பி சென்றனர்.
பின் சம்பவம்குறித்து காவல்நிலையத்திற்கு தகவலளிக்கப்பட சம்பவ இடத்திற்கு அதிகாரிகள் ரவுடியின் உடலை மீது பிரேதபரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின் வழக்குபதிவு செய்த காவல்துறையினர் முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடைபெற்று இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.