Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு…. மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு நடத்த உயர்நீதிமன்றம் உத்தரவு….!!!!

தமிழகத்தில் கல்வியை எளிதில் அணுகக்கூடிய வகையில் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமும், நேரடியாகவும் வகுப்புகளை நடத்தலாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் கூறியிருக்கிறது. இதையடுத்து உடல் நலம் சரியில்லாத மாற்றுத்திறனாளி மாணவர்கள் வகுப்புகளை தேர்ந்தெடுக்க வாய்ப்பு வழங்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

நேர்வழி இயக்கம் என்ற அறக்கட்டளை 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், பணியாளர்களுக்கும், கொரோனா தடுப்பூசியை முன்னுரிமை அளித்து வழங்க வேண்டும் என்றும், பள்ளிகளில் காணொளி காட்சி மூலமாக வகுப்புகள் நேரடியாக வழங்க வேண்டும் என்றும், வழக்கு தொடுக்கப்பட்டது. அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, 18 வயதுக்கு கீழ்பட்ட ஒரு தடுப்பூசி செலுத்த அனுமதி இல்லை என்றும், அதற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி முறையாக செலுத்தப்பட்டு வருகிறது என்றும், 9 முதல் 12ம் வகுப்புகளுக்கான ஆன்லைன் மற்றும் நேரடி வகுப்புகள் மாற்று நாட்களில் வழங்கப்பட்டு வருவதாகவும் தமிழக அரசு சார்பில் கூறப்பட்டது.

இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் எந்த நாட்களில் நேரடி வகுப்புகளும், எந்த நாட்களில் ஆன்லைன் வகுப்புகளும், நடத்தப்படும் என்பதை அறிவித்து அதற்கான விதிகளை தெரிவிக்க வேண்டும் என்றும், பள்ளி, கல்லூரிகள் நீதிமன்றமும் ஆன்லைன் மூலம் நடத்தப்படுவதால் பல சாதகங்களும், பாதகங்களும் உள்ளது என்று தெரிவித்துள்ளனர். தொடர்ந்து ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொள்ளும் மாணவர்கள் மன அழுத்தத்திற்கு உள்ளாவதால் வகுப்புகளை மீண்டும் தொடங்குவதற்கு உத்தரவிடக்கோரி இயக்கம் தொடர்ந்த வழக்கை முடித்து வைத்தனர்.

Categories

Tech |