அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் கேணிக்கரை சப்-இன்ஸ்பெக்டர் குகனேஸ்வரன் தலைமையில் காவல்துறையினர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். இந்நிலையில் புதிய பேருந்து நிலையம் அருகே சென்றபோது அப்பகுதியில் சந்தேகப்படும்படி ஒருவர் நின்று கொண்டிருந்துள்ளார். இதனையடுத்து காவல்துறையினர் அவரை பிடித்து விசாரித்ததில் செட்டியார் தெருவை சேர்ந்த பத்மநாபன் என்பது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து அவர் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்ததும் தெரியவந்துள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் பத்மநாபன் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து அவரிடம் இருந்த லாட்டரி சீட்டுகள் மற்றும் லாட்டரி விற்ற பணம் ஆகியவை பறிமுதல் செய்துள்ளனர். இதனைத்தொடர்ந்து பாஸ்கரனிடம் விசாரணை நடத்தி அவரது கூட்டாளியான பாஸ்கரன் என்பவரையும் கைது செய்து அவரிடமிருந்த லாட்டரி சீட்டுகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.