விசுவ இந்து பரிஷத் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பேட்டையில் விசுவ இந்து பரிஷத் அமைப்பினர் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் மாவட்ட செயலாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில் இந்த போராட்டத்தில் அவர்கள் வங்காள தேசத்தில் இந்துக்கள் தாக்கப்படுவதை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் இந்த போராட்டத்தில் மாநில செய்தி தொடர்பாளர் ஆறுமுகம், மாவட்ட துணைத்தலைவர் கண்ணன், பிரச்சார அணித் தலைவர் இளங்கோ, மாருதிராஜன், முத்துராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதனால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.