முன்னாள் கிரிக்கெட் வீரரான இர்பான் பதான் பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடும் பிளேயிங் லெவன் அணியை தேர்வு செய்துள்ளார்.
டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமன் இல் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.. விராட் கோலி தலைமையிலான இந்திய அணி கடந்த 18ஆம் தேதி நடைபெற்ற பயிற்சி போட்டியில் இங்கிலாந்து அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.. அதனை தொடர்ந்து நேற்று ஆஸ்திரேலிய அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது.. இந்நிலையில் குரூப் 12 சுற்றில் வரும் 24ஆம் தேதி பாகிஸ்தான் அணியுடன் மோதுகிறது இந்திய அணி. பாகிஸ்தான் அணியை இந்தியா கட்டாயம் வெல்லும் என்று பலரும் தங்களது கருத்துக்களை கூறி வருகின்றனர்..
அதே சமயம் பாகிஸ்தான் அணியிடம் விளையாடும் இந்திய அணியின் பிளேயிங் 11ஐ உத்தேசமாக கணித்து கூறி வருகின்றனர்.. அந்த வகையில் தற்போது முன்னாள் கிரிக்கெட் வீரரான இர்பான் பதான் பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடும் லெவன் அணியை தேர்வு செய்துள்ளார்..
அவர் குறிப்பிட்டுள்ளதாவது, இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா மற்றும் கே.எல் ராகுல் களம் இறங்கலாம்.. 3ஆவது இடத்தில் விராட்கோலி, 4வது இடத்தில் சூர்யகுமார் யாதவும், 5ஆவது இடத்தில் ரிஷப் பன்ட் ஐ தேர்வு செய்துள்ளார்..
ஆல்ரவுண்டர்களாக ஹர்திக் பாண்டியா மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோரை தேர்வு செய்துள்ளார். மேலும் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார், முகமது ஷமி, பும்ரா ஆகியோரை தேர்வு செய்துள்ள இர்பான் பதான் சுழல்பந்து வீச்சாளர்கள் ஆக வருண் சக்கரவர்த்தியை மட்டுமே தேர்வு செய்துள்ளார். ராகுல் சஹார் அல்லது ரவிச்சந்திரன் அஷ்வின் ஆகியோரை சேர்க்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இர்பான் பதான் தேர்வு செய்துள்ள அணி இதுதான் :
1. ரோகித் சர்மா
2. கேஎல் ராகுல்
3. விராட் கோலி
4. சூர்யகுமார் யாதவ்
5. ரிஷப் பன்ட்
6. ஹர்திக் பாண்டியா
7. ரவீந்திர ஜடேஜா
8. முகமது சமி
9. வருண் சக்கரவர்த்தி
10. ஜஸ்பிரிட் பும்ரா
11. புவனேஸ்வர் குமார்