Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கோழிகளை விழுங்கிய மலைப்பாம்பு…. உரிமையாளர் அளித்த புகார்…. லாவகமாக பிடித்த வனத்துறையினர்….!!

கோழிகளை விழுங்கிய மலைப்பாம்பை வனத்துறையினர் பிடித்துள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கீழவடகரை பகுதியில் பிரேம்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் திருக்குறுங்குடி வனத்துறையில் வேட்டை தடுப்பு காவலராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் 10 அடி நீளமுடைய மலைப்பாம்பு ஒன்று பிரேம் குமாரின் வீட்டுக்குள் புகுந்து கோழி கூண்டுக்குள் இருந்த 3 கோழிகளை விழுங்கியது.

இதனைப் பார்த்த பிரேம்குமார் அதிர்ச்சி அடைந்து இதுகுறித்து களக்காடு புலிகள் காப்பக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற புலிகள் காப்பக துணை இயக்குனர் ராமேஸ்வரன் உத்தரவின்படி வனச்சரகர் பாலாஜி மற்றும் வனத்துறையினர் கோழிகளை விழுங்கிய மலைப் பாம்பை லாவகமாக பிடித்தனர். இதனையடுத்து வனச்சரகர் பத்மநேரி பீட் ராவுத்தர் கோவில் சரக வனப்பகுதியில் மலைப்பாம்பை கொண்டு போய் விட்டனர்.

Categories

Tech |