சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக வாலிபரை அனைத்து மகளிர் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கடலூர் மாவட்டத்திலுள்ள புளியங்குடி பகுதியில் கலியமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுபாஷ் என்ற மகன் உள்ளார். இவர் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சுபாஷ் நான் வசிக்கும் பகுதியில் இருக்கும் 16 வயது சிறுமியிடம் காதலிப்பதாக கூறியிருக்கிறார். ஆனால் அதற்கு அந்த சிறுமி மறுப்பு தெரிவித்துள்ளார். அதன்பின் அந்த சிறுமியிடம் தன்னை காதலிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்வேன் என மிரட்டியுள்ளார். இதனை அடுத்து சிறுமி வீட்டில் தனியாக இருந்த சமயத்தில் அவர்கள் வீட்டுக்குள் சுபாஷ் அத்துமீறி நுழைந்து அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
அதற்கு பிறகும் அடிக்கடி சிறுமியை மிரட்டி சுபாஷ் அவரை பாலியல் பலாத்காரம் செய்து வந்திருக்கிறார். இதனால் தற்போது சிறுமி 9 மாத கர்ப்பிணிப் பெண்ணாக இருக்கிறார். இது பற்றி சிறுமி கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த மகளிர் காவல்துறையினர் சுபாஷை கைது செய்து போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது. இதற்கிடையில் சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. பின் டி.என்.ஏ பரிசோதனை முடிவின் அறிக்கையும் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டு வழக்கு தொடர்ந்து நடைபெற்று இருக்கிறது.
இந்த வழக்கில் அனைத்து விசாரணைகளையும் முடிவடைந்த காரணத்தினால் தற்போது நீதிபதி எழிலரசி தீர்ப்பு வழங்கியுள்ளார். அந்தத் தீர்ப்பில், டி.என்.ஏ பரிசோதனை முடிவில் சுபாஷ் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்ட காரணத்தினால் அவருக்கு 7 ஆயிரம் ரூபாய் அபராதமும், 10 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 30 நாட்களுக்குள் மாவட்ட குழந்தைகள் நலக்குழு தலைவர் அரசு சார்பாக 5 லட்சம் ரூபாய் இழப்பீட்டு தொகையை வழங்குமாறு நீதிபதி தீர்ப்பு வழங்கியுள்ளார்.