Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

வலியில் அலறிய பெண்…. ஆம்புலன்ஸில் பிரசவம்…. மகிழ்ச்சியில் குடும்பத்தினர்….!!

மருத்துவமனைக்கு செல்லும் வழியில் பெண்ணிற்கு ஆம்புலன்ஸில் பிரசவம் நடைபெற்றதில் பெண் குழந்தை பிறந்துள்ளது.

கடலூர் மாவட்டத்தில் உள்ள சாத்தியம் கிராமத்தில் மாணிக்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சரண்யா என்ற மனைவி உள்ளார். இவர்கள் இருவருக்கும் இரண்டரை வயதில் ஒரு குழந்தை உள்ளது. இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த சரண்யாவுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டு இருக்கிறது. அதனால் உறவினர்கள் 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவித்து அதன் மூலமாக அரசு மருத்துவமனைக்கு சரண்யாவை ஏற்றிக்கொண்டு சென்றுள்ளனர்.

அப்போது திடீரென மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவருக்கு பிரசவ வலி அதிகமானதால் சாலையோரம் ஆம்புலன்சை நிறுத்தியுள்ளனர். அதற்குப்பிறகு ஆம்புலன்சில் இருந்த மருத்துவ உதவியாளர் சௌந்தரராஜன் சரண்யாவுக்கு பிரசவம் பார்த்ததில் அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்திருக்கிறது. இதனையடுத்து உடனடியாக தாய் மற்றும் குழந்தையை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்று சிகிச்சை அளிக்கப்பட்டதில் தாயும் குழந்தையும் நலமாக இருக்கின்றனர்.

Categories

Tech |