Categories
கிரிக்கெட் விளையாட்டு

சையத் முஷ்டாக் அலி : தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் திடீர் விலகில் ….! காரணம் இதுதான் ….!!!

காயத்திலிருந்து முழுமையாக குணமடையாததால் சையத் முஷ்டாக் அலி தொடரிலிருந்து தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் விலகியுள்ளார்.

இந்திய அணியின் ஆல்ரவுண்டரான வாஷிங்டன் சுந்தர் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது கைவிரலில் ஏற்பட்ட காயம் காரணமாக விலகினார் .இதைத்தொடர்ந்து சமீபத்தில் நடந்த ஐபிஎல் தொடரில் இருந்தும் வாஷிங்டன் சுந்தர் விலகி இருந்தார் .இதனிடையே சையத் முஷ்டாக் அலி தொடருக்கான தமிழ்நாடு அணியில் வாஷிங்டன் சுந்தர் இடம்பெற்றிருந்தார்.

இந்நிலையில் காயத்திலிருந்து முழுமையாக குணமடையாததால் சையத் முஷ்டாக் அலி தொடரிலிருந்து வாஷிங்டன் சுந்தர் விலகியுள்ளார். மேலும் பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில்  இவருக்கு உடற்தகுதி சோதனை செய்யப்பட்டது .இந்த சோதனையில் 4 வாரங்கள் ஓய்வு எடுத்தால் மட்டுமே காயத்திலிருந்து முழுமையாக குணமடைய முடியும் என தெரிவிக்கப்பட்டதால் அவர் இந்த தொடரில் இருந்து விலகியுள்ளார்.

Categories

Tech |