டெஸ்லா நிறுவனமானது கணிக்கப்பட்டதை விட மூன்றாம் காலாண்டில் அதிக வருமானத்தை ஈட்டியுள்ளது.
உலக நாடுகள் கொரோனா பாதிப்பால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் வர்த்தக நிறுவனங்கள் தொற்றால் பாதிக்கப்பட்டு கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. உலக அளவில் வர்த்தக நிறுவனங்களின் மூலப்பொருட்கள் மற்றும் எலக்ட்ரானிக் சிப் தட்டுப்பாடு தொடர்ந்து வரும் நிலையில் டெஸ்லா நிறுவனமானது அதிக கார்களை விற்பனை செய்து கணிக்கப்பட்டதை விட மூன்றாம் காலாண்டில் அதிக வருமானத்தை ஈட்டியுள்ளது.
இந்த ஆண்டு அந்நிறுவனத்தின் பங்கு மதிப்பு 23% உயர்ந்துள்ளது. இதனையடுத்து அந்த நிறுவனத்தின் சென்ற ஆண்டு வருமானமானது 8.77 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது. இந்த ஆண்டு 13.7 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இது இந்திய மதிப்பில் சுமார் 1,02,800 கோடி ஆகும்.